வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2020/05/18

துறைநீலாவணையின் அரசியல் எதிர் காலம்


நீண்ட வரலாற்றை கொண்ட நமது கிராமம் அரசியல் மயப்படுத்தலில் இன்னும் தன்னிறைவு காணவில்லை. இதற்கு காரணம்  எமது மக்கள் தமிழன் என்ற உணர்ச்சி மேலீட்டில் இருப்பதேயாகும்.இந்த உணர்வை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி நமது போராட்ட வரலாற்றை இனிப்பாக கூறி எம் மக்களின் வாக்குகளை சூறையாடி செல்கின்றனர். இனத்தின்  மீது நாம்   வைத்துள்ள பற்று நம்மை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த அரசியல் வாதிகள் கையாளும் யுத்தியாக காணப்படுகின்றது.
இன்று அவரவர் சுய லாபத்துக்காக வீட்டுக்கொரு கட்சியை நம்மவர் ஆதரிக்க தொடக்கி உள்ளனர் .இதனால் எமது அரசியல் அபிலாசைகள் என்றுமே தீர்க்கப்பட போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடையாளம். அதனை நம்பி நாம் வாக்களித்து அரசியல் அனாதைகளாக தவிக்கின்றோம். வாக்கு கேட்க வருபவர்கள் அதன் பின்பு எதையும் தருவதில்லை . தருவதற்கும் அவர்களிடம் எதுவுமில்லை .எதிர் கட்சியில் இருந்து கொண்டு எதை அவர்களால் எமக்கு பெற்று தர முடியும் . 30வருட ஆயுத போராடடத்தால் எதையுமே பெற முடியவில்லை .ஆயுதப் போராடடம் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்கள் சென்று விட்டன .இந்த கால கட்டத்திலும் அறிக்கை விடுவதை தவிர இவர்களால் எதையாவது செய்ய முடிந்ததா ???

எனவே தமிழர்களாகிய நாம் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு போன்ற எதிர் கட்சி யில் இருந்து கொள்ளக் கூடிய கட்சிகளுக்கு நாம் இனிமேலும் வாக்களிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் .

"ஆட்சி அமைக்கும் கட்சியோடு இணைந்து கொள்வோம்" என தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குறுதி தந்தால் மட்டுமே  நாம் த .தே .கூ க்கு வாக்களிப்பது பற்றி சிந்திக்க வேண்டும் . இனிமேலும்  'உணர்வு' எனும் ஆயுதம் எமை பாதாளத்துக்குள் தள்ளி விட கூடாது .

நாம் இன்று பல வகையிலும் ஒதுக்கப் படுவதற்கும் அரசியல் பலவீனமே காரணம்.திறமை இருந்தும் பல இடங்களில் எம்மவர் தட்டி கழிக்கப் படுகின்றனர்.இதற்கு காரணம் எம்மிடம் அரசியல் பலமின்மையே ஆகும் .

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தூர நோக்கோடு நாம் புரிந்து கொள்ள வேண்டும் . அதனை பயன்படுத்தி நமது அரசியல் தேவைகளை அடைய முயற்சி  செய்ய வேண்டும் ,
கௌரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச்ச அவர்களோடு இணைத்து 
ஆட்சி அமைக்க கூடிய வகையில் எமது வேட்பாளர் தெரிவு அமைய வேண்டும் .
அப்படி பார்க்கப் போனால் கருணா ,பிள்ளையான் ,அமல் சேர் இவர்களெல்லாம் ஆளும் கட்சியோடு இணைந்து தமிழ் மக்களின் உணர்வுகளை பெற்று தருவதாக கூறுகிறார்கள் . இதில் என்ன வேடிக்கை என்றால் கருணா ஒரு கட்சி ,பிள்ளையான் ஒரு கட்சி , அமல் சேர் ஒரு கட்சி . இப்படி ஆளுக்கொரு கட்சியில் கேட்டால்  பாவம் என் மக்கள் யாருக்கு வாக்களிப்பர் . ஆளும் கட்சியோடு இணைவதுதான் இவர்களது முடிவு என்றால் ஏன் தனித்தனியே போட்டி இட வேண்டும் .இதனாலும் எமது வாக்குகள் சிதற கூடிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு .

அமல் அவர்களுக்கு நாம் வழங்கும் வாக்கு; கணேசமூர்த்திக்கு நாம் வாக்களிக்க போய் அது வேற்று இன உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு உதவியாய் இருந்ததை போல அமைய நிறையவே வாய்ப்பு உள்ளது .

மீதம் இருப்பது கருணா, பிள்ளையான்

இதில் பிள்ளையான் முன்னாள் மாகாண சபை முதலமைச்சராய் இருந்து மட்டக்களப்பு மண்ணுக்கு செய்த சேவைகள் இன்றும் நன்றியுடன் இம் மக்களால் பார்க்கப்படுகின்றது .

எனவே அன்பார்ந்த துறைநீலாவணை மக்களே 
நன்றாக சிந்தித்து எமது வாக்கு பலத்தை பிரயோகியுங்கள் ...
அது ஒன்றே எமது எழுச்சியாகும்.
அரசியல் கொடி  பிடிப்போர் கிராமத்தின் தேவைகளை புரிந்து செயல் படுங்கள் .
-புகழ் 

2019/05/22

துறைநீலாவணையில் வறிய குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு



குறுமண்வெளி இராசம்மா அன்பளிப்பு சங்கத்தினால்  துறைநீலாவணையில் இருந்து தெரிவு செய்யயப்படட  30 வறிய  குடும்பங்களுக்கு, 11.05.2019 அன்று காலை 10.00மணியளவில் துறைநீலாவணை வடக்கு -01 கிராம அதிகாரி காரியாலய முன்றலில்  அரிசி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .

தாம் வாழும் சமூகத்தின் துயர் துடைக்கும் உயரிய சிந்தனையினை கொண்டு சமூக சேவை ஆற்றி வரும்  துறைநீலாவணையினை சேர்ந்த குமாரசிங்கம் விநோதாஸ் அவர்களின் இடை விடாத முயற்சி காரணமாக இவ் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது .

இந்த நிகழ்வுக்கு துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் விவாக ,பிறப்பு, இறப்பு பதிவாளர் திரு .தி .புகழேந்தி முதலானோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்வின் தலைமை உரையினை ஆற்றிய கு.விநோதாஸ் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் .அவர் தனது உரையில் , இது போன்ற நிகழ்வுகள் மூலம் எமது சமுதாயத்தினை மேலும் வலுப்படுத்த முடியும் , என்னை போன்று இன்னும் பலர் பல உதவிகளை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் , அத்தோடு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மூலம் இது போன்ற உதவிகள் மக்களை சென்றடைய வேண்டும் என நான் விரும்புகின்றேன் .என கூறினார் .

அதனை அடுத்து உரையாற்றிய  துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய  செயலாளர் ஆ.லெவ்விதன்  இந்த முயற்சி இத்துடன் முடிவடைய கூடாது , இனி வரும் காலங்களில் இடம் பெற வேண்டும்  அத்தோடு  இராசம்மா அன்பளிப்பு நிதியத்துக்கு  எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார் .

அதனை அடுத்து அதிதிகளால் பயனாளிகளுக்கு அரிசி பொதி வழங்கி வைக்கப்பட்ட்து .

                    "மக்கள் சேவையே மகேசன் சேவை" 


































2019/05/19

கண்ணகி விழா -2019

               துறைநீலாவணை வரலாற்று சிறப்பு மிக்கதும் தொன்மையானதுமான கண்ணகி வழிபாட்டின் இவ்வருட திரு சடங்கு 14.05.2019 (செவ்வாய் ) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 21.05.2019 (செவ்வாய் ) அதிகாலை இடம்பெறும் திரு குளிர்த்தி சடங்குடன் இவ்வருட அம்மன் விழா நிறைவு பெறும் .