வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2013/08/22

துறை நீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த தங்க நாக உரு எங்கே ? திருடியது யார் ??

 துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்த முக்கியமான் தெய்வீக அம்சங்கள் இந்தவருட(2013)  உத்சவ ஆரம்பத்தின்  போது சில விசமிகளால் களவாடப்பட்டு மூன்று நாட்களின் பின்பு துறைநீலவனை முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.அதாவது அம்மனின் முகக்களை ,முக்கோண சிலம்பு ,வரலாற்று பெருமை மிக்க தங்கத்தாலான நாக உரு முதலானவை களவாடப் பட்டிருந்ததாக ஐயம் வெளியிடப் பட்டிருந்தது .இதன் படி தங்கத்தாலான நாக உரு தவிர ஏனையவை மாரியாம்மன் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டன .அதாவது களவாடியவர்கள் மாரியம்மன் கோவிலில் கொண்டு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு மிகப்பெரியதொரு களவு இடம் பெற்றிருந்தும் இது பற்றிய போலிஸ் முறைப்பாடு எதுவும் குறித்த ஆலய நிருவாக சபையால் 05-07-2013 வரை செய்யப்படவில்லை.திருடப்பட்ட பொருட்கள் கிடைக்கப்பெற்றதால் போலீசில் முறைப்பாடு செய்யத் தேவையில்லை என மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்து விட்டு பேசாமல் இருந்துவிட்டனர்.இந்த இடத்தில் ஒன்றை கூறலாம் என நினைக்கின்றேன்.களவாடப்பட்ட பொருட்கள் கிடந்த இடத்துக்கு போலிஸ் உதவியுடன் மோப்ப நாய்களைகொண்டுவந்து தேடியிருந்தால் கள்வனை பிடிக்க வாய்ப்பு கிட்டியிருக்கலாம் .அனால் கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் இதை செய்யவில்லை.
தங்கத்தால் ஆன நாகம் ஆலயத்தில் இருக்கவில்லை அது ஒரு கட்டுக்கதை என  கூறி அந்த விடயத்தை கருத்தில் எடுக்காமல் விட்டு விட்டனர் .
இருந்தாலும் ஆலய உ ள் வேலைகளில் ஈடுபடுபவர்கள் மூலம் இதை அறிந்து கொண்ட பொதுமக்களில் சிலர் இந்த விடயம் அடங்கலாக பல கோரிக்கைகளை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர் .அதன் படி கடந்த 05-07-2013 அன்று பிரதேச செயலாளரால் ஒரு கலந்துரையாடல் நடத்தப் பட்டு அதில் இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்க்கும் நோக்கோடு கிராமத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு கண்ணகி அம்மன் ஆலய நிருவாகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்க குறித்த ஆலய நிருவாகமானது ஒரு சில நபர்களுக்கு 23.08.2013 திகதி நாக பாம்பு இருந்ததாக சத்தியம் பண்ணுவதற்கு ஆலயத்துக்கு வருமாறு முட்டாள் தனமான அழைப்பினை விடுத்திருக்கிறது.
தங்க நாக உருவை கண்டவர்கள் சத்தியம் மூலம் உண்மையை சொல்ல ஒரு போதும் தயங்கியதில்லை .எமது சமய நம்பிக்கைப்படி சத்தியத்தை மீறிய உண்மை எதுவும் இருக்கமுடியாது .சத்தியம் பொய்யாக செய்தால் அந்த தெய்வமே அவருக்கான தண்டனையை கொடுக்கும் என்பதே நமது நபிக்கை ஆகும் .
இருந்தாலும் சத்தியம் செய்வதற்கு முன்பு இந்த தங்க நாக உரு சம்மந்தமான பூரண விசாரணை ஒன்றினை தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவர் நடாத்த வேண்டும் .அதில் நாக உரு இருந்ததற்கான ஆதாரங்களை "இருந்தது "எனக் கூறுபவர்கள் முன்வைக்க வேண்டும் ."இருக்கவில்லை"  எனக் கூறுபவர்கள் ஆதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் .அதில் தேவை ஏற்படின் சத்தியம் செய்தல் ஒரு முடிவாக வரலாம் .
இதை விட்டு விட்டு சிறு பிள்ளை தனமாக மற்றவர்களை சத்தியம் செய்ய வருமாறு அழைப்பது ஆரோக்கியமான நிருவாக கட்டமைப்புக்கான அம்சம் அல்ல .
எனவே துறைநீலாவணை பொது மக்களே இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் எமக்கென்ன என நாம் இருப்பதால் தான் நம்மை முட்டாள்கள் என சிலர் நம்பி அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.நமது கிராமத்தின் முக்கிய ஆலயமொன்றின் பிரச்சினை இது. .இதனை சரிவர ஆராய்ந்து தக்கதொரு தீர்வினை பெற எழுந்து வாருங்கள் . .இந்த இணையத்தளம் மூலம் இந்த செய்தியினை படிப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த (எமது ஊர்) மக்களுக்கு தெளிவாக கூறுங்கள்.
உண்மை நீண்ட காலம் உறங்கியதாக சரித்தரம் இல்லை .
தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும்-.
                                                            அன்புடன் துறையூர் தினகா புகழ் 

துறை நீலாவணை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த தங்க நாக உரு எங்கே ? திருடியது யார் ??

கருத்துகள் இல்லை: