வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/08/15

கிரிஸ் பூதங்களின் அட்டகாசத்தால் துறைநீலாவணை போலிஸ் நிலையம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

கடந்த இரவு துறைநீலாவணைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் துறைநீலாவணையில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர் . அப்போது அவர்கள் கூக்குரல் இட இளைஞர்கள் அவ்விடத்தை முற்றுகை இட்டனர் .அப்போது மர்ம மனிதர்கள் ஆளுககொரு திசையில் ஓட்டம் பிடித்தனர்.இவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்ற பொதுமக்களும் இளைனர்களும்  இவர்களில் ஒரு சிலர் துறைநீலாவணை போலிஸ் நிலையத்தினுள் நுழைந்ததை கண்டனர். உடன் பொலிசாரிடம் மர்மமநிதர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என இளைஞர்கள் கேட்டபோது பொலிசார் அப்படி எவரும் போலிஸ் நிலையத்தினுள் வரவில்லலை என கூற வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைத்த பொதுமக்கள் போலிஸ் நிலையத்தை உடைத்தனர்.
இது இவ்வாறு இருக்க ஏனைய பொதுமக்கள் வேறு திசையில் ஓடிய மர்ம மனிதர்களை   துரத்திசென்றனர். அப்போது பாதுகாப்புக்காக வந்த மேலதிக பொலிசார் கிராமத்தினுள் நுழைந்து மர்ம மனிதர்களை தேடிக்கொண்டு இருந்த இளைனர்களை சரமாரியாக தாக்கி அவர்களது மோட்டர் சைக்கிளோடு அவர்களை கைது செய்த இராணுவத்தினர் போலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சிறிது நேரத்தின் பின் விடுதலை செய்தனர் .பொலிசாரால் தாக்கப்பட்ட இளைனர்களில் சிலரின் பெறுமதியான நகைகளும் பொலிசாரால் சூறயடப்பட்டுள்ளது.  பொலிசாரின் இந்த நடவடிக்கையால் ஊரினுள் பதுங்கி இருந்த மர்ம  மனிதர்த்கள் லாவண்யமாக காப்பாற்றப்பட்டனர்.

இன்று காலை துறைநீலாவணைக்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா (நவம்) அவர்கள் பொலிசாரின் தாக்குதலால் படுகாயமடைந்த இளைனர்களை  வைத்திய சாலைக்கு எடுத்து சென்றார்.



இதற்கு இடையில் பொலிசார் 04 பொதுமக்களை வலுக்கட்டாயமாக கைது செய்து கல்முனை நீதிமன்றில் ஆஜர் படுத்தி கடந்த இரவு இவர்கள் தான் போலிஸ் நிலையத்தை உடைத்தவர்கள் என குற்றம் சாட்டினர் . இவர்களை விசாரணை செய்த நீதிமன்று தலா 5000 ரூபா காசிப்பிணையில்  இவர்களை வீடு செல்ல அனுமதித்து வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைத்தது .
பாருங்கள் கிரிஸ் பூதத்துக்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை .பல இடங்களில் பிடிபட்ட கிரிஸ் பூதங்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட சும்மா இருந்த பொது மக்கள் பணம் கட்ட வேண்டும் .இதைத்தான் விதி என்பதா ?.

கருத்துகள் இல்லை: