வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/11/24

துறைநீலாவணை பிரதான வீதியின் இன்றைய நிலை....

துறைநீலாவணை பிரதான வீதியின் இன்றைய நிலைதான் இது.வீதியை புனரமைக்கின்ரோம் என்ற போர்வையில் கொஞ்சம் கல்லையும் கிரவளையும் நடு வீதியில் கொட்டி ஒரு மாதமாகி விட்டது. இதுவரையில் எந்த விதமான புனரமைப்பு பணியும் நடந்த பாடில்லை.சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளப் பெருமக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்து அபிவிருத்திப் பணிகள் எப்போதும் ஆமை வேகத்தில் நடப்பதே வரலாற்று உண்மை. தற்கு பல உதாரணங்களை கூற முடியும் .

இந்த பிரதான வீதி பொறுப்பற்ற புனரமைபால் நிதமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது.எந்தவிதமான வடிகால் அமைப்பும் செய்யாமல் வீதியில் கல்லும் கிரவலும் கொட்டப்பட்டதால் மழை நீர் குளத்தை சென்றடையாமல் கிராமத்தின் ஒரு பகுதியை வெள்ளக் காடாக மாற்றியுள்ளது. பல மக்களின் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்து விட்டது.
மகாவித்தியாலயத்தை அண்டிய பகுதியில் இந்த புனரமைப்பு நடப்பதால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.





வீதி அமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான இவ் வீதியின்   இந்த நிலைக்கு யார் காரணம்.சம்மந்தப் பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஏன் உசும்பாமல் இருக்கின்றது.மக்களின் போக்குவரத்துக்கு இடஞ்சல் இல்லாதவாறு வெகு விரைவில் இவ் வீதி புனரமைகப்படவேண்டும் .இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
இத்தகவலை மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் துறைநீலாவணை இணையம் தெரிவித்துள்ளது .

கருத்துகள் இல்லை: