வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2012/05/28

கண்ணகி விழா -2012






பன்னெடுங்காலமாக எமது கிராம மக்களின் குல தெய்வமாக வீற்றிருந்து அருளாட்சி நடாத்தும் கண்ணகி தெய்வத்தின் இவ்வருட த்திற்கான திருவிழா பற்றிய முழு விபரத்தையும் உங்களுக்கு தருகின்றோம் .

2012/05/21

துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் 2012

 துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்             2012-05-20 பி .ப 4 .30 மணியளவில் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் தலைவர் மு.தருமரெத்தினம் அவர்களது தலைமையில்  நடைபெற்றது.
 சுப முகூர்த்த நாட்கள் 2012-2013


திருமணம், பூப்பு நீராட்டு விழா முதலான சுப காரியங்களை நடத்துவதட்கு சுப நாள் தேடுகிறீர்களா?                                                              
                             ஒரே பார்வையில் இதோ ..............

2012/05/17

குருபெயர்ச்சி 2012 பலன்கள்

 குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!

(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)

நிகழும் நந்தன வருடம் வைகாசி மாதம் 4-ஆம் தேதி (17.5.12), வியாழக்கிழமை கிருஷ்ணபட்சத்து துவாதசி திதியில், ரேவதி நட்சத்திரம் ஆயுஷ்மான் நாமயோகம், கரசை நாமகரணம் ஜீவனுள்ள சித்த யோகத்தில், சந்திரன் ஹோரையில்- பஞ்சபட்சியில், மயில் வலுவிழந்த நேரத்தில், சூரிய உதயம் பெயர்ச்சி நாழிகை 31.1-க்கு, மாலை 6:18-மணிக்கு சர வீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்தில் நுழைகிறார் குரு பகவான். கல்வி, ஞானம், யோகம், தன்னடக்கம், ஒழுக்கம் மற்றும் பல உயரிய குணங்களுக்கெல்லாம் உரிய கிரகமான குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.