வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/01/22

பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் உண்மையா?


பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே.
இவையெல்லாம் படிப்பறிவில்லாத பழைய கிராமங்களில் நடைமுறையிலிருந்த வழக்கங்கள். தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த ஒரு சிலருக்கு உள் மனத்தில் மற்றவர்களது கவனத்தைக் கவர வேண்டுமென்கிற ஒரு ஆசை இருக்கும். இதனை டிப்ரசிவ் சைக்கோசிஸ் (Depressive psychosis) என்று சொல்வார்கள். மேலும் பெண்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா எனும் நோயாக மாறுகிறது.
இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர்.
இதனை மருத்துவ ரீதியாக, நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். மனத்தில் உள்ள எண்ணங்களைச் சிதற விடாமல் ஒருநிலைப் படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம். இதற்கு ‘ஹெட்டிரோசஜன்’ (Hetrosuggestion) என்று பெயர். இதற்கு தகுந்த மனநல மருத்துவர்கள் ஆலோசனையுடன் பென்டதால் சோடியம் (Pentathol Sodium), ஈதர் (Ether) ஆகிய மருந்துகளை எடுத்து உள் மன உணர்வுகளை அறிந்து எண்ணங்களை ஒருநிலைப் படுத்தலாம்.
இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் வருகிறது.
pugalenthy

கருத்துகள் இல்லை: