வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2013/07/08

துறைநீலாவணை கண்ணகி அம்மன்ஆலய நீண்ட கால பிரச்சினையான மரபினை உடைத்தெறிய புறப்படுவோம் ....

துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய மரபு ரீதியான நிருவாக கட்டமைப்பினை மாற்றி துறைநீலாவணை பொது மக்கள் அனைவரும் பங்குகொள்ளும் புதிய நிருவாக கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது காலத்தின் தேவை .

இது சம்மந்தமாகவும் இந்த ஆண்டு நடை பெற்ற உத்சவத்தின் போது நிகழ்ந்த முறைகேடுகள் பற்றியும் துறைநீலவாவனை பொது மக்கள் பிரதேச செயலாளருக்கு கொடுத்த மனுவின் பிரகாரம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 09 ம் மாதம் 07ம் திகதிக்கு இடையில் மிகப் பெரிய கூட்டம் ஒன்று எமது கிராமத்தில் இடம்பெறவுள்ளது.இது சம்மந்தமான கலந்துரையாடல் 05.07.2013 அன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு சுதாகர் அவர்களது தலைமையில் இடம்பெற்று மேற்படி முடிவு பெறப்பட்டது .
அது மட்டுமல்ல சைவப் புலவர் திரு தில்லைநாதன் அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து மரபு மாற்றத்தை தான் விரும்புவதாக கூறினார்.    சமுதாய பரம்பலில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கும் காலவோட்டத்தின் தேவைக்கும் ஏற்ப பழமையில் இருந்து விடுபட்டு புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளமுடியும் . அதற்கு எனது விருப்பத்தையும் வெளியிடுகின்றேன் .இருந்த போதும் முழுமையாக தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கங்கள் அனைத்தையும் ஒரே தடவையில் மாற்றி விடவும் முடியாது எனவும் உறுதியாக கூறினார்.
எனவே அனைவரும் ஒன்றுபட்டு இந்த மரபு ரீதியான நிருவாக கட்டமைப்பை மாற்றி எல்லோரும் இணைந்து ஒற்றுமையாய் ஆலய திருவிழாவினை நடத்துவதே ஊருக்கு பெருமை .திறமை மிகுந்த எம்மவர்கள் எந்தக் குடியில் இருந்தாலும் அவர்களே நிருவாகிகளாக வரவேண்டும் .

அன்பர்களே ஒன்று படுங்கள் .....  
தி .புகழேந்தி 

எப் பொருள் யார் யார் வாய்  கேட்பினும் அப்பொருள் மெய் பொருள்  காண்பது அறிவு

கருத்துகள் இல்லை: