வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2013/07/12

துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கட் போட்டி


துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம் அதன் 42 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியானது இன்று பி ,ப 6.00 மணிக்கு (12.07.2013-வெள்ளிக்கிழமை ) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் முதல் முறையாக மின்னொளியில் இரவு நேரத்தில் இக்  கிரிகட் போட்டிகள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது


.மேலும் 13.14,15,16 ஆகிய திகதிகளில் முற்றாக இரவு நேர போட்டியாக இடம்பெறவுள்ளது.

இதன் இறுதிப் போட்டி 17-07-2013 அன்று மாலை  6 மனிக்கு இடம்பெறும் .

சுமார் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள் மோதும் இந்தக் கிரிக்கட் போட்டியானது முழுக்க முழுக்க மின்னொளியில் இரவில் இடம்பெறுவதால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ரசிகர்கள் பாது காப்பான முறையில் போட்டிகளை கண்டு மகிழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளயாட்டுக் கழக கௌரவ தலைவர் திரு கே.ஜெயானந்தன் அவர்கள் குறிப்பிட்டார் .

கருத்துகள் இல்லை: